செ.கி தமிழ் கவிதைகள் | செ.கி Tamil Kavithai Poetry Tamil
நெருங்கிய உறவு
வேண்டாம் என நினைக்கும் உறவு கூட வெட்டிக் கொண்டு நிற்க,
வேண்டும் என நினைக்கும் உறவு தான் வேரோடு பிடுங்கி கொண்டு செல்கிறது😢
- என்ன செய்ய?!
இக்கால மழை
மழை நின்ற பின் தூரல்- மரக்கிளைகளில்;அன்று
மழைக்கு முன்பும் தூரல்,
மழை நின்ற பின்பும் தூரல் - விவசாயிகளின் கண்களில்;இன்று.
வெற்றி பெற
உயர செல்ல, உச்சிப்பிடிக்க-
உடைத்து செல், தகர்த்து செல் தடைகளை,
நீ செல்லவேண்டிய தூரம் வெகு தூரம்,
நீ போகவேண்டிய உயரம் வெகு தொலைவில்,
ஆமை வேகம் பத்தாது,
முயலாக இருந்தாலும் அயர்ந்து தூங்க கூடாது,
தொட்டு, தொட்டு பார்த்தால் கிட்டாது ஏதும்,
தொடர்ந்து சென்று பெற்றுக் கொள்ளும் வரை போராடு.
பற்றா கொடி
பற்றி எழ சுற்றிலும் எந்த பிடிமானமும்
இல்லாத போதும்,
நிமிர்ந்து எழும் ஒற்றைக் கொடி - நீ யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறாய்..!?
பெண்ணே
காலங்கள் மாறலாம்,
கண்ணீரும் தீர்ந்து போகலாம்,
கவலைகள் மட்டும் குறையாத டி
கொட்டி தீர்க்க தேவை இல்லை,
முட்டி முளைத்திடு- இன்றே.
இயற்கை அழிவு
அழிவு என்பது ஆணவத்தினால் மட்டும் அல்ல, அடுத்த தலைமுறை பற்றி யோசிக்காமல் இருப்பதினால்; இயற்கை காப்போம்
இடைவெளி அன்பு
நீ பேசிய நேரம் ..
நான் இருந்தேன் தூரம்..
நான் கேட்கும் நேரம்..
உன் மொழி மௌனம்.
கண்ணீர்-மழை
உண்ணிடம் கொட்டி
தீர்த்த பிறகே,
எங்களிடம் கொட்டி
தீர்த்தாயோ?
உழைப்பாளி
உழைப்பவன் அனைவரும் உத்தமன் அல்ல,
ஆனால் உத்தமன்
உழைத்தே வாழ்கிறான்.
கல் மனம்
கல் மனம் என்பது கரையும் வரையா?
அல்லது கரையாமலே
இருப்பதா?
எறும்பு ஊற கல்லும்
தேயுமே!?...
காற்றடைத்த பலூன்
'அடைத்து' வைத்தவனையும்,
அழகாக 'மிதகவைத்து' அழகு பார்க்கும் - "காற்று".
அவள்
நான் நினைக்கயில் அவளும் நினைப்பாளா? அறியேன்.
ஆனால் மறந்து விட்டாளோ என்ற நினைத்த கணத்தில்;அடித்தது மணி- தொலைபேசியில் அவள்.
ஊருக்காக
உனக்கு உத்தமனாக இருந்து பார்,
ஊருக்கு பித்தனாக தெரிவாய்.
ஊருக்கு உத்தமனாக இருந்து பார்,
உண்மையிலேயே
பித்து பிடித்து தான் திரிவாய்.
அவப்பெயர்
ஊர்முழுக்க இடம் பிடித்திருந்து என்ன பயன், ஊரே புறம் பேசவும் இடம் பிடித்து இருக்கிறாயே.
கொல(லை) பட்டினி (பசி)
கொள்ளைப் புறம் போய் தேடும் வரை பசி - பணக்கார பசி
செத்தபால் ஊத்தாம
(கொன்னுப்புட்டு) போற பசி - கொல பசி(பட்டினி) - ஏழை பசி
செ.கி கவிதைகள்:
0 Comments