கிராமத்து பழமொழிகள் | Village Proverbs in Tamil
![]() |
பழமொழிகள் |
1.தாயும், பிள்ளையும் ஒன்னு ஆனாலும், வாயும், வயிறும் வேறு.
2.கரிசனம் கட்டிக்கிட்டு அழுவுது, கட்டிச்சோறு புட்டுக்கிட்டு அழுவுது.
3.நாயிக்கு வேலை இல்லை நிக்க நேரம் இல்லை.
4.வீம்பு புடிச்சவன் கையி வெறும் கை.
5.பனைமரத்துல இருந்து விழுந்து பொழச்சவனும் இருக்கான், வாய்க்கா வரப்புல வழுக்கி விழுந்து இறந்தவனும் இருக்கான்.
6.சூரியன பார்த்து நாய் உலைத்தால், நாயிக்கு கேடா? சூரியனுக்கு கேடா?
7.பனை மரத்தடியில் நின்னு குடிச்சா, பால் கள் ஆகிடுமா?
8.ஆத்துல போட்டாலும் அளந்து போடனும்.
9.கேட்கரவன் கேணைய இருந்தா, கேப்பையில நெய் வலியுதுனு சொல்வான்.
10.விதை ஒன்னு போட்டால் சுரை ஒன்னு முளைக்குமா?
11.மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.
12.யானைக்கு ஒரு ஏக்கர், ஆட்டுக்கு ஆயிரம் ஏக்கர்
ஆட்டுக்குட்டி நனையுதேனு ஓ நாய் கவலைப் பட்டுச்சாம்.
13.எங்கையோ போற ஆத்தா, என் மேல் வந்து ஏறு ஆத்தா.
14.திணை விதைத்தவன் திணை அறுப்பான்,
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
15.காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
16.கோழி மிதிச்சி குஞ்சு சாகுமா?
17. நண்டோட நெல், ஏறோட கரும்பு, வண்டியோட வாழை, தேரோட தென்னை.
18. தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.
19.நடக்க மாட்டாதவன் சித்தப்பன் வீட்டுல பொண்ணு கேட்டானாம்.
20.ஊடு (வீடு) வந்து, ஒவுத்திரியம் (கவலை) தாங்குல ஓலை வாயன் பொண்ணு கேட்டானாம்.
மேலும் படிக்க>>
0 Comments