கிராமத்து விடுகதைகள் பகுதி-5 | தமிழ் புதிர் விடுகதைகள்
![]() |
தமிழ் விடுகதைகள் பகுதி-5 |
41. மலையிலிருந்து இரண்டு குண்டு உருட்டி விட்டேன் மடியிலேயே வந்து விழுந்தது அது என்ன?
42. தேர் அசைய அசைய பூவாக கொட்டுகிறது அது என்ன?
43. தோல் உரிச்ச குருவி ஊருக்குப் (சந்தைக்கு) போகுது அது என்ன?
44. குச்சி வீட்டுக்குள்ள குமரி குதிக்கிறாள் அது என்ன?
45. மண்ணுக்குள்ள மயிர் கோதி அது என்ன?
46. ஓகோ லைலா ஓசந்த லைலா கண்ட துண்டம் சூப்பே லைலா.. அது என்ன?
47. வெட்ட வெட்ட தழைவான் ஆனால் கண்டுக்காமல் விட்டால் உதிர்ந்து விடுவான் அவன் யார்?
48. அங்கமுத்து வாசலிலே தங்கமுத்து காயுது அதை எடுத்து வாயில் போட்டால் திக்குமுக்கு ஆடுது அது என்ன?
49. அழகான பெ(பொ)ண்ணுக்கு அல்லையில் ஓட்டை அது என்ன?
50. சின்ன மச்சான் செவக்க வைச்சான் அது என்ன?
மேலும் படிக்க>>
மேலும் படிக்க>>
கிராமத்து வித்தியாசமான பழமொழிகள் பகுதி -1
விடைகள்:
41.கண்ணீர்
42.தேங்காய் துருவல் / ஆரிய கல்
43.புளி
44.தயிர் கடைதல் - மத்து
45. முருங்கை காய்
46. பனை கிழக்கு
47.முடி
48. மிளகாய்
49. தாலி (மாங்கல்யம்)
50. பாக்கு
0 Comments