கிராமத்து விடுகதைகள் பகுதி-3
![]() |
விடுகதைகள் பகுதி-3 |
21. ஆடு மேய்யுது, தோல் காயிது, கறி வேகுது அது என்ன?
22. செத்தவன் சந்தைக்கு போறான் அது என்ன?
23. சரக்,புரக் சந்தைக்கு போறான் அது என்ன?
24. ஊளை மூக்கன் சந்தைக்கு போறான் அது என்ன?
25. வேலி சுத்தி வில் அருணை பாம்பு அது என்ன?
26. கல்லுக்கு அடியில் வில் அது என்ன?
27. கொளுஞ்சிக்கு (செடி) அடியில் கொட்டாப்பிடி அது என்ன?
28. ஊசி பூகாத கிணற்றில் ஒரு படி தண்ணீர் அது என்ன?
29. யானை போய் ஆறுமாதம் ஆவுது, ஆனா ஆனை போன தாரை மறையல அது என்ன?
30. நான் ஏறும் குதிரைக்கு ஆயிரம் கண் அது என்ன?
விடைகள்:
21.கோழி முட்டை
22.கருவாடு
23.செருப்பு
24. நுங்கு
25.அரைஞாண் கயிறு
26. தேள்
27.முயல்
28. இளநீர்
29.ஏர் உழவு
30. கட்டில்
0 Comments