கிராமத்து விடுகதைகள் தமிழ் பகுதி-2
![]() |
விடுகதைகள் பகுதி-2 |
11. கட்டி மாம்பழம் தொப்னு விழுந்தது, அதை பார்த்தவர்கள் இரண்டு பேர், எடுத்தது 10 பேர், ருசி பார்த்தது ஒருத்தர் அது என்ன?
12. கத்தி போல் இவை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், திண்ண பழம் பழுக்கும், திண்ணாத காய் காய்க்கும் அது என்ன?
13. கரை கரையா ஓடுதாம் குருவி, கங்கணம் கட்டுதாம் குருவி, மூக்கு சிவக்குதாம் குருவி முன்னூறு முட்டை விட்டதாம் குருவி அது என்ன?
14. சேலம் சிவப்பு, செவ்வாய் பேட்டை கருப்பு, உடைச்சா பருப்பு திண்ண கசப்பு அது என்ன?
15. அட்டைக்கு ஆயிரம் கண்டு, முட்டைக்கு மூணு கண்ணு, எங்க வீட்டு ராசாத்திக்கு ஒரே கண்டு அது என்ன?
16. எங்கள் ஊரு ராசாத்தி பூ வைக்காமல் சடை போட மாட்டாள் அது என்ன?
17. அம்மா சீலையை மடிக்க முடியல, அப்ப பணத்தை எண்ண முடியல அது என்ன?
18. எட்டாத கொம்பில் முட்டாய் (மிட்டாய்) அது என்ன?
19. ஓடரவனுக்கும் தொங்கரவனுக்கும் ஒரே நாளில் கல்யாணம் அது என்ன?
20. தோண்டிட்டி முடக்கிட்டி அது என்ன? (தோண்டிட்டி - சாப்பாடு, முடக்கிட்டி- தூக்கம்)
விடைகள்:
11. பனை பழம், கண், பத்து விரல்கள், நாக்கு
12. வேப்பமரம்
13. வயலுக்கு தண்ணீர் பாய்சுதல், வாய்க்கால் தண்ணீர் மாற்றி விடுதல், சோளம் பூட்டை வைத்தல்
14. குண்டுமணி
15. மாவு சலிப்பு சலடை, தேங்காய்,ஊசி
16. முருங்கை மரம் - பூ, காய்
17. வானம், நட்சத்திரம்
18.தேன்
19. மீன் குழம்பு - புளி, மீன்
20. நாய்
0 Comments