கிராமத்து விடுகதைகள் பகுதி-1
1. கடி என்றாலும் கடிக்க முடியல கண்டங்கத்தரிக்காய், பிடி என்றாலும் பிடிக்க முடியல பிஞ்சிக் கத்தரிக்காய் அது என்ன?
2. ஆயிரம் பேர் சேர்ந்து கட்டிய கோபுரம் ஒருவன் கண் பட்டு அழிந்தது அது என்ன?
3. பெட்டியை திறந்தால் கிருஷ்ணன் பிறந்தான் அது என்ன?
4. அண்ணன் தம்பி நான்கு பேர் வெயில் கண்டால் வேலைக்கு போவார்கள் அது என்ன?
5. அயோத்தி ராமன் கையேந்தி நிக்கிறான் அது என்ன?
6. தெரிந்து பூ பூக்கும், தெரியாமல் காய் காய்க்கும் அது என்ன?
7. சாய்ந்து பூ பூக்கும், சாயாமல் காய் காய்க்கும் அது என்ன?
8. அணி,அணியாய் இலை இருக்கும் அரசன் இலையும் இல்லை, மொட்டு மொட்டாக பூ பூக்கும் முருக பூவும் அல்ல, கோனக் கோனயாய் காய் இருக்கும் வாழைக்காயும் இல்லை அது என்ன?(செடி/மரம்)
9. எள்ளிலும் சிறு தலை (இலை), பூவிலும் இருவகை பூ பூக்கும் அது என்ன? (செடி/மரம்)
10. சொம்பு நிறைய முத்துக்கள் அது என்ன?
விடைகள்:
1.தண்ணீர்
2. தேன் கூடு
3.வேர்கடலை
4. கொட்டமரம் காய் (ஆமணக்கு)
5. ஆமணக்கு இலை
6. நிலக்கடலை
7.எள் செடி
8. எருக்கன் செடி- இலை,பூ, காய்
9. எடுத்தான் செடி இலை,பூ
10. மாதுளை
0 Comments