கிராமத்து பழமொழிகள் | Village Proverbs in Tamil
1. ஆடற மாட்ட ஆடி கறக்கனும், பாடுற மாட்ட பாடி கறக்கனும்.
2. மேயுற மாட்ட நக்குற மாடு கெடுத்த மாதிரி.
3. பன்னியோட சேர்ந்து மாடும் பீ திண்ணுமாம்.
4. அடியாத மாடு படியாது.
5. இஞ்சி தின்ன குரங்கு மாதிரி.
6. நேத்து பேய்ஞ்ச மழையில் இன்னைக்கு முளைச்ச காளான்.
7. அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்.
8. நாக்கு மேல பல்ல போட்டு பேசாத.
9. காடு வா..வாங்குது வீடு போ..போங்குது.
10. யோக்கிய காரன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை.
11.வள்ளவனுக்கு புள்ளும் ஆயுதம்
12. வள்ளவனையும் வழுக்குமாம் வழுக்கு பாறை.
13. கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா கொண்டு போகப் போவுது.
14. காக்க உக்கார பனம்பழம் விழுந்த கதையா போச்சு.
15. மண் குதிரையை (குதிர்) நம்பி ஆத்துல இறங்காதே.
மேலும் படிக்க>>
0 Comments