கிராமத்து விடுகதைகள் பகுதி -6 | தமிழ் புதிர் விடுகதைகள் - Vidukathaigal, Riddles in Tamil
51. பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்து பூலோகம் ஆலும் பூக்களின் ராஜாவே ஒரே பூக்களில் ஐந்து வகை பூ பூக்கும் பூ என்னா பூ?
52. அத்துவான காட்டுக்குள் அங்கம்மா பேயாடுறாள் அது என்ன?
53.ஒரே ஒரு நெல் குத்தி வீடு முழுவதும் உமி அது என்ன?
54.அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல அது என்ன?
55.பல் இல்லாமல் கடிப்பான் அவன் யார்?
56.கழுத்து உண்டு தலை இல்லை, கை உண்டு விரல் இல்லை அது என்ன?
57.சட்டை போடாமல், சட்டை கழட்டுவான் அவன் யார்?
58.இடி இடிக்குது, மழை பேயுது, மஞ்சள் பூசாரி வெளிய போரான் அது என்ன?
59.திண்டுக்கலுக்கும், திருவண்ணாமலைக்கும் ரோட்டு சேட்டு வரான் சீலையை தூக்கி காட்டு
விடை:
51. எடுத்தலான் / விடுத்தான் என்று அழைக்கும் ( விடத்தலை மர பூ)
52.சோளபயிர்
53.விளக்கு (தீ குச்சி விளக்கு ஏற்றுதல்)
54.நெல் (அறுவடை)
55.செருப்பு
56.சட்டை
57.பாம்பு
58.மலம் கழித்தல்
59.இட்லி ( வெந்துவிட்டதா என பார்த்தல்)
0 Comments